Autocad தொடர்பான தகவல்கள் தமிழில்

Friday, June 12, 2009

அசைத்தல் (move)

குறித்த ஒரு தொகுதி details ஐ ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அசைக்க move பாவிக்கலாம்.

அசைக்க வேண்டிய உருவங்களை select செய்து move ஐ click செய்தல் வேண்டும்.command line இல் Specify point or [Displacement] என இருக்கும். ஒரு புள்ளியை cursor மூலம் select செய்யவும்.அல்லது keyboard மூலம் புள்ளியை தட்டச்சிடவும். இப்போதுஅப்புள்ளி சென்றடையவேண்டிய இடத்தை click செய்வதன் மூலமோ அல்லது தட்டச்சிடல் மூலமோ உள்ளீடு செய்யவும். இப்போது நீங்கள் தெரிவு செய்த உருவம் அசைந்திருக்கும்.


துல்லியமாக அசைக்கவேண்டிய தேவை ஏற்படும்போது இம்முறையை பாவிப்பது உகந்தது. கண்மட்டுக்கு அசைக்க வேண்டியிருப்பின் அசைக்க வேண்டிய உருவை select செய்தபின் உருவம் கீழ்கண்டவாறு இருக்கும் .







மீண்டும் mouse மூலம் நீலமாகத்தெரியும் எதாவது ஒரு புள்ளியில் click செய்து mouse ஐ அசைத்து பார்க்கவும். click செய்ய வேண்டாம்.உருவம் விகாரமாக அசையப்போவது போல் தோன்றும். அதற்கு keyboard இல் spacae bar ஐ ஒரு முறை தட்டச்சிட்டு இப்போது mouse ஐ அசைக்கவும்.கீழ் கணடவாறு தோன்றும் .



உருவம் சரியாக அசையும். தேவையான இடத்தில் வைத்து click செய்வதன் மூலம் அசைக்க முடியும். அல்லது co-cordinate ஐ command line இல் உள்ளீடு செய்வதன் மூலமும் அசைக்கலாம்.

No comments:

Post a Comment