Autocad தொடர்பான தகவல்கள் தமிழில்

Monday, June 22, 2009

Shortcut keys

Shortcut என்ற சென்ற பதிவில் குறிப்பிட்ட ALIASEDIT என்பது வேலை செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறு முயற்சி செய்து பாருங்கள். Tools சென்று customise இல் Edit program parameters(acad.pgp). என்பதை தெரிவு செய்யவும். shortcut keys களை Notepad வடிவில் காணலாம்.


To find the shortcut keys type ALIASEDIT in the command line.If it is not working go to Tools ,customise and select Editprogram parameters(acad.pgp). You can get all the information in Notepad veiw.


Friday, June 19, 2009

WEBCAD

நாம் வரைந்த autocad plan ஐ html page ஆக சேமிப்பு செய்து எமது plan ஐ ஒரு web page ஆக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். autocad ஐ திறக்கவும். command line இனுள் PUBLISHTOWEB என தட்டச்சிட்டு enter ஐ அழுத்தவும். கீழ் கண்டவாறு window உருவாகும். (ஒவ்வொரு window இலும் செய்யப்பட வேண்டியவை அந்தந்த window இற்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ளது )




01) Next என்பதை click செய்யவும்.அப்போது இவ்வாறு ஒரு error massage ஒன்று தோன்றும்.




02) ok ஐ click செய்யவும். அப்போது கீழ் கண்டவாறு window தோன்றும்.




03)தேவையான autocad file ஐ தெரிவு செய்யவும்.open ஐ click செய்யவும். (dwg file மாத்திரமே சேர்க்க முடியும்.) அதன் பின்


04)உங்களுடைய html file (output ) save ஆக வேண்டிய இடத்தை தெரிவு செய்து உங்களுடைய file இன் பெயரையும் கொடுக்கவும். web பற்றி ஏதாவது விவரணம் தேவை எனின் கடைசியாக உள்ள text window இல் தட்டச்சிடவும். இப்போது Next ஐ click செய்யவும்.



05)மேலுள்ள window இல் தேவையான image type ஐ தெரிவு செய்யவும். DWF format ஆனது zoom,pan வசதிகளைக் கொண்டது. அனால் JPEG,PNG format இல் அவ்வசதிகள் இல்லை. click Next.




06)output இலுள்ள images எந்த ஒழுங்கில் (list,array,....) தோன்றச் செய்வது என தீர்மானித்து தெரிவு செய்த பின் click Next.



07)விரும்பிய theme ஐ தெரிவு செய்யவும்.



08)Enable i-drop என்பதை சரியிட்டு click Next.



09)ஏற்கெனவே தெரிவு செய்த plan ஐ add என்பதை click செய்வதன் மூலம் image list இல் சேர்க்கவும். வெளியீடு layout ஆகவோ model ஆகவோ தேவை என்பதை Enable i-drop என்பதற்கு நேரே உள்ள தெரிவு செய்யும் பகுதியில் click செய்து தெரிவு செய்து கொள்ளவும். click Next. மேலும் எதாவது plan சேர்க்க வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

10) click Next.



11) click preview. இப்போது நீங்கள் தயாரித்த html file கணனித் திரையில். அல்லது finish என்பதை click செய்து file சேமிக்கப்பட்ட இடத்திர்ற்கு சென்று (படிமுறை 4 இல் ) html file ஐ திறக்காலாம். ஏற்கெனவே வரையப்பட்ட plan ஐ அதே பெயரில் மீளாக்கம் செய்ய படிமுறை 1 இல் Edit existing webpage என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Wednesday, June 17, 2009

How to find the shorcut keys?



விசைப்பலகை short cut keys களை அறிய command line இனுள் ALIASEDIT என type செய்து (capital எழுத்துக்கள் பாவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) Enter அழுத்தவும்.கீழ் கண்ட window பெறப்படும்.அதனுள் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தேவையான எழுத்தை command line இனுள் type செய்து Enter ஐ அழுத்த வேண்டும்.

To find the shorcut keys in autocad type ALIASEDIT using key board in the command line and press enter.No need to type in capital letters.Then you can find the shortcut key reference window.

Friday, June 12, 2009

சின்ன விஷயம்

01 ) ஒரு autocad drawing plan ஐ திறக்கும்போது plan ஐ window இல் காணவில்லை எனின் ஏன்ன செய்வது ???
முதலில் command line இல் z ஐ அழுத்தி enter ஐ அழுத்தவும். பின் E ஐ அழுத்தி enter ஐ அழுத்தவும்.

அப்படியும் வரவில்லை எனின் .......
format இற்கு சென்று layer இற்கு சென்று அனைத்து layer களும் turn off செய்யப்பட்டுள்ளதா (உரு 1) என பார்த்து தேவையான layer ஐ turn on செய்யவும்.


உரு 1

02)draw tool bar இலுள்ள எல்லா command உம் வேலை செய்கிறது ஆனால் window இல் எதுவும் மாற்றம் இல்லை எனின் (உதாரணமாக line command வேலை செய்கிறது ஆனால் வரையும்போது window இல் line வதுவும் தெரியவில்லை ) எனின் format சென்று layer இற்கு சென்று current layer turn off பண்ணப்பட்டுள்ளதா (உரு 2 ) என பார்த்து அந்த layer ஐ turn on பண்ணவும்.

உரு 2

அசைத்தல் (move)

குறித்த ஒரு தொகுதி details ஐ ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அசைக்க move பாவிக்கலாம்.

அசைக்க வேண்டிய உருவங்களை select செய்து move ஐ click செய்தல் வேண்டும்.command line இல் Specify point or [Displacement] என இருக்கும். ஒரு புள்ளியை cursor மூலம் select செய்யவும்.அல்லது keyboard மூலம் புள்ளியை தட்டச்சிடவும். இப்போதுஅப்புள்ளி சென்றடையவேண்டிய இடத்தை click செய்வதன் மூலமோ அல்லது தட்டச்சிடல் மூலமோ உள்ளீடு செய்யவும். இப்போது நீங்கள் தெரிவு செய்த உருவம் அசைந்திருக்கும்.


துல்லியமாக அசைக்கவேண்டிய தேவை ஏற்படும்போது இம்முறையை பாவிப்பது உகந்தது. கண்மட்டுக்கு அசைக்க வேண்டியிருப்பின் அசைக்க வேண்டிய உருவை select செய்தபின் உருவம் கீழ்கண்டவாறு இருக்கும் .







மீண்டும் mouse மூலம் நீலமாகத்தெரியும் எதாவது ஒரு புள்ளியில் click செய்து mouse ஐ அசைத்து பார்க்கவும். click செய்ய வேண்டாம்.உருவம் விகாரமாக அசையப்போவது போல் தோன்றும். அதற்கு keyboard இல் spacae bar ஐ ஒரு முறை தட்டச்சிட்டு இப்போது mouse ஐ அசைக்கவும்.கீழ் கணடவாறு தோன்றும் .



உருவம் சரியாக அசையும். தேவையான இடத்தில் வைத்து click செய்வதன் மூலம் அசைக்க முடியும். அல்லது co-cordinate ஐ command line இல் உள்ளீடு செய்வதன் மூலமும் அசைக்கலாம்.

Friday, June 5, 2009

AUTOCAD Icons

Autocad மென்பொருளானது 1982 இல் தனது முதல் verson ஆன Autocad verson 1.0 ஐ வெளியிட்டதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல versonகள் வெளியாகிவிட்டன.அது பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/AutoCAD#Version_history இற்கு செல்லவும்.

சில Autocad icon கள்

















நன்றி google
பயனுள்ள தகவல் எதனையும் தர முடியவில்லைஅடுத்த பதிவில் ஒரு தகவலோடு சந்திப்போம்.

Friday, May 29, 2009

எது சிறந்த autocad plan????




ஒரு சிறந்த autocad plan இற்கு இருக்க வேண்டிய சில பண்புகள்

01)வெவ்வேறு வகையான details வெவ்வேறு layer இல் இருக்க வேண்டும்.
உ-ம்:-ஒரு surveying plan இல் control traverse ஒரு layer இலும் details வேறு layer இலும் lettering வேறு layer இலும் இருக்க வேண்டும்.

02) layer இற்கு கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் கண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடாது (Rainbow colors ஏற்றவை அல்ல ).அத்தோடு சில layer உடைய நிறங்கள் வழமையாகப் பாவிக்கப் படுபவையாக இருக்கின்றன. அவற்றை மாற்றக்கூடாது.
உ-ம்:- control traverse இன் நிறம் passian blue, cannels சிவப்பு நிறம்
03) தேவையான features block ஆக்கப் பட்டிருக்க வேண்டும்
உ-ம்:- building plan இலுள்ள கதவுகள் தனித்தனியாக ,contour plan இலுள்ள சமவுயர contours தனியாக.
04) அதிக எழுத்துக்கள் plan இல் இருக்க கூடாது . சுருக்கமான வடிவில் plan இனுள் கொடுக்கப்பட்டு reference மூலம் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
உ-ம்:- BM -Bench Mark
Tp -Telephone post
05) சரியான ஆள்கூற்று வடிவத்திற்கு(co-0rdinate system) plan ஐ transform பண்ணி கொடுத்திருத்தல் வேண்டும்.
உ-ம்:- surveying plan இல் Arbitary co-ordinate system மூலம் plan வரையப் பட்டிருப்பின் grid இலுள்ள co-ordinate பெறுமதியும் window இலுள்ள co-ordinate உம் ஒரே பெறுமானமாக இருக்க வேண்டும்.
மேலும் building plan இற்கு ஆள்கூற்று பிரச்சினை தேவையற்றது.
06) zoom in ஆகும்போது தடிப்பு அதிகரிக்க கூடிய எழுத்துருக்கள் (fonts) பாவிக்கப்பட்டிருக்கக்கூடாது .
07) புள்ளிகளின் அளவு (size) ஒரே அளவாகக் காணப்பட வேண்டும். வரையப் படும்போதே இச்செயன்முறை செய்யப்பட வேண்டும்.
autocad இல் format இற்கு சென்று point style இற்கு சென்று set size in absolute units என்பதை select செய்ய வேண்டும்.(தேவையான size,style கொடுக்கலாம்) புள்ளிகளை வரைய முதலே இந்த settings செய்யப்பட வேண்டும்.
08) layers யாவும் lock ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
09) தேவையற்ற layers off ஆக்கப்பட்டிருக்க வேண்டும்
உ-ம்:- total station இலிருந்து download செய்யப்பட்ட தகவல்(data) மூலம் plan வரைவதற்கு annottation,attribute layers முக்கியமானவை ஆனால் இறுதி plan இற்கு அவை தேவையற்றவை. அவ்வாறான layers ஐ off ஆக்கி வைக்கலாம்.(layer ஐ delete செய்வதை விட இவ்வாறு செய்வது சிறந்தது ஏனெனில் plan ஐ மீண்டும் சரி பார்த்துக்கொள்ள இது உதவும் )
மீண்டும் ஒரு தகவலோடு சந்திப்போம்.

Thursday, May 28, 2009

நுழைகின்றேன்





வணக்கம்!
முதலாவதாக வலையுலகத்துக்குள் பிரவேசிக்கின்றேன்.
autocad பற்றி நானறிந்ததை உங்களோடு......

autocad என்ற மென்பொருள் இப்போது வரைபடத்துறையில் செலுத்தும் செல்வாக்கும் அது அடைந்துள்ள வளர்ச்சியும் பிரமாண்டமானது. drawing fields இல் அதிக எண்ணிக்கையானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருளாகவும் autocad விளங்குகிறது. எனக்கு தெரிந்த சில அவசியமான autocad சம்பந்தமான துணுக்குத்தவல்களை தொடர்ந்து வரும் பதிவுகள் மூலம் தரலாம் என எண்ணியுள்ளேன்.


ஒரு சிறிய விடயத்தோடு ஆரம்பிக்கின்றேன் .

ஆள்கூறுகளை (co-ordinates) புள்ளி வடிவில் (point form ) குறிப்பதற்கு menu bar இல் draw இற்கு சென்று point என்பதை click செய்வதன் மூலம் குறிக்கலாம். அல்லது draw toolbar இல் point என்ற புள்ளி வடிவிலான icon ஐக் click செய்வதன்மூலம் குறிக்கலாம்.ஆனால் இம்முறை மூலம் அதிக புள்ளிகளை குறிப்பது எரிச்சலை ஏற்படுத்தும். microsoft excel மூலம் இலகுவாக அதிக புள்ளிகளை குறிக்கமுடியும். excel இற்கு சென்று முதலில் x,y,z ஆள்கூறுகளை முறையே a,b,c cell களினுள் ஒழுங்கு செய்து கொள்ளுங்கள் .
d1 cell இனுள் click செய்து menu bar இல் insert இற்கு சென்று function இல் concatinate ஐ தெரிவு செய்யவும். அல்லது fx என்பதை click செய்யவும். text 1 என்றுள்ள கட்டத்தினுள் cursor ஐ click செய்து பின் a1 cell இனுள் click பண்ணவும்.தொடர்ந்து text 2 cell இனுள் click பண்ணி கம அடையாளத்தை (,) விசைப்பலகையின் மூலம் type செய்யவும். பின் text 3
cell இனுள் click செய்து ப௧ cell இனுள் click செய்யவும். தொடர்ந்து text 4 cell இனுள் click பண்ணி கம அடையாளத்தை (,) விசைப்பலகையின் மூலம் type செய்யவும். text 5 என்றுள்ள கட்டத்தினுள் cursor ஐ click செய்து பின் c1cell இனுள் click பண்ணவும். இச்செயன்முறை நிறைவு பெற்றதும் கீழ்க்கண்ட வடிவம் கிடைக்கப்பெறும்.
ok இ click பண்ணவும். இப்போது d1 cell இனுள் x,y,z என்ற வடிவில் ஆள்கூறுகள் காணப்படும்.
அல்லது
d1 cell இ select பண்ணி பின்வரும் code ஐ fx text window இல் paste பண்ணவும்.
=CONCATENATE(A1,",",B1,",",C1)
அந்த cell இலிருந்து(d1) track செய்வதன் மூலம் எல்லா cell களிலும் அவ்வடிவம் பெறப்படும்.
இப்போது d cell கள் முழுவதையும் copy செய்யவும்.
autocad இற்கு சென்று point இ click செய்து command லைன் இனுள் right click செய்து paste செய்யவும். சில வேளை window இல் புள்ளிகள் எதுவும் காணப்படாது. அதற்கு விசைப்பலகையில் Esc இஐ அழுத்தி பின் z ஐ அழுத்தி Enter ஐ அழுத்தி பின் E ஐ அழுத்தி Enter இ அழுத்தவும். இப்போது புள்ளிகள் யாவும் window இல் தெரியும்.
நிறைய புள்ளிகளை insert பண்ண இது ஒரு சிறந்த முறை ஆகும் . மீண்டும் அடுத்த பதிவில் ஒரு தகவலோடு சந்திப்போம்.