Autocad தொடர்பான தகவல்கள் தமிழில்

Friday, May 29, 2009

எது சிறந்த autocad plan????




ஒரு சிறந்த autocad plan இற்கு இருக்க வேண்டிய சில பண்புகள்

01)வெவ்வேறு வகையான details வெவ்வேறு layer இல் இருக்க வேண்டும்.
உ-ம்:-ஒரு surveying plan இல் control traverse ஒரு layer இலும் details வேறு layer இலும் lettering வேறு layer இலும் இருக்க வேண்டும்.

02) layer இற்கு கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் கண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடாது (Rainbow colors ஏற்றவை அல்ல ).அத்தோடு சில layer உடைய நிறங்கள் வழமையாகப் பாவிக்கப் படுபவையாக இருக்கின்றன. அவற்றை மாற்றக்கூடாது.
உ-ம்:- control traverse இன் நிறம் passian blue, cannels சிவப்பு நிறம்
03) தேவையான features block ஆக்கப் பட்டிருக்க வேண்டும்
உ-ம்:- building plan இலுள்ள கதவுகள் தனித்தனியாக ,contour plan இலுள்ள சமவுயர contours தனியாக.
04) அதிக எழுத்துக்கள் plan இல் இருக்க கூடாது . சுருக்கமான வடிவில் plan இனுள் கொடுக்கப்பட்டு reference மூலம் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
உ-ம்:- BM -Bench Mark
Tp -Telephone post
05) சரியான ஆள்கூற்று வடிவத்திற்கு(co-0rdinate system) plan ஐ transform பண்ணி கொடுத்திருத்தல் வேண்டும்.
உ-ம்:- surveying plan இல் Arbitary co-ordinate system மூலம் plan வரையப் பட்டிருப்பின் grid இலுள்ள co-ordinate பெறுமதியும் window இலுள்ள co-ordinate உம் ஒரே பெறுமானமாக இருக்க வேண்டும்.
மேலும் building plan இற்கு ஆள்கூற்று பிரச்சினை தேவையற்றது.
06) zoom in ஆகும்போது தடிப்பு அதிகரிக்க கூடிய எழுத்துருக்கள் (fonts) பாவிக்கப்பட்டிருக்கக்கூடாது .
07) புள்ளிகளின் அளவு (size) ஒரே அளவாகக் காணப்பட வேண்டும். வரையப் படும்போதே இச்செயன்முறை செய்யப்பட வேண்டும்.
autocad இல் format இற்கு சென்று point style இற்கு சென்று set size in absolute units என்பதை select செய்ய வேண்டும்.(தேவையான size,style கொடுக்கலாம்) புள்ளிகளை வரைய முதலே இந்த settings செய்யப்பட வேண்டும்.
08) layers யாவும் lock ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
09) தேவையற்ற layers off ஆக்கப்பட்டிருக்க வேண்டும்
உ-ம்:- total station இலிருந்து download செய்யப்பட்ட தகவல்(data) மூலம் plan வரைவதற்கு annottation,attribute layers முக்கியமானவை ஆனால் இறுதி plan இற்கு அவை தேவையற்றவை. அவ்வாறான layers ஐ off ஆக்கி வைக்கலாம்.(layer ஐ delete செய்வதை விட இவ்வாறு செய்வது சிறந்தது ஏனெனில் plan ஐ மீண்டும் சரி பார்த்துக்கொள்ள இது உதவும் )
மீண்டும் ஒரு தகவலோடு சந்திப்போம்.

Thursday, May 28, 2009

நுழைகின்றேன்





வணக்கம்!
முதலாவதாக வலையுலகத்துக்குள் பிரவேசிக்கின்றேன்.
autocad பற்றி நானறிந்ததை உங்களோடு......

autocad என்ற மென்பொருள் இப்போது வரைபடத்துறையில் செலுத்தும் செல்வாக்கும் அது அடைந்துள்ள வளர்ச்சியும் பிரமாண்டமானது. drawing fields இல் அதிக எண்ணிக்கையானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருளாகவும் autocad விளங்குகிறது. எனக்கு தெரிந்த சில அவசியமான autocad சம்பந்தமான துணுக்குத்தவல்களை தொடர்ந்து வரும் பதிவுகள் மூலம் தரலாம் என எண்ணியுள்ளேன்.


ஒரு சிறிய விடயத்தோடு ஆரம்பிக்கின்றேன் .

ஆள்கூறுகளை (co-ordinates) புள்ளி வடிவில் (point form ) குறிப்பதற்கு menu bar இல் draw இற்கு சென்று point என்பதை click செய்வதன் மூலம் குறிக்கலாம். அல்லது draw toolbar இல் point என்ற புள்ளி வடிவிலான icon ஐக் click செய்வதன்மூலம் குறிக்கலாம்.ஆனால் இம்முறை மூலம் அதிக புள்ளிகளை குறிப்பது எரிச்சலை ஏற்படுத்தும். microsoft excel மூலம் இலகுவாக அதிக புள்ளிகளை குறிக்கமுடியும். excel இற்கு சென்று முதலில் x,y,z ஆள்கூறுகளை முறையே a,b,c cell களினுள் ஒழுங்கு செய்து கொள்ளுங்கள் .
d1 cell இனுள் click செய்து menu bar இல் insert இற்கு சென்று function இல் concatinate ஐ தெரிவு செய்யவும். அல்லது fx என்பதை click செய்யவும். text 1 என்றுள்ள கட்டத்தினுள் cursor ஐ click செய்து பின் a1 cell இனுள் click பண்ணவும்.தொடர்ந்து text 2 cell இனுள் click பண்ணி கம அடையாளத்தை (,) விசைப்பலகையின் மூலம் type செய்யவும். பின் text 3
cell இனுள் click செய்து ப௧ cell இனுள் click செய்யவும். தொடர்ந்து text 4 cell இனுள் click பண்ணி கம அடையாளத்தை (,) விசைப்பலகையின் மூலம் type செய்யவும். text 5 என்றுள்ள கட்டத்தினுள் cursor ஐ click செய்து பின் c1cell இனுள் click பண்ணவும். இச்செயன்முறை நிறைவு பெற்றதும் கீழ்க்கண்ட வடிவம் கிடைக்கப்பெறும்.
ok இ click பண்ணவும். இப்போது d1 cell இனுள் x,y,z என்ற வடிவில் ஆள்கூறுகள் காணப்படும்.
அல்லது
d1 cell இ select பண்ணி பின்வரும் code ஐ fx text window இல் paste பண்ணவும்.
=CONCATENATE(A1,",",B1,",",C1)
அந்த cell இலிருந்து(d1) track செய்வதன் மூலம் எல்லா cell களிலும் அவ்வடிவம் பெறப்படும்.
இப்போது d cell கள் முழுவதையும் copy செய்யவும்.
autocad இற்கு சென்று point இ click செய்து command லைன் இனுள் right click செய்து paste செய்யவும். சில வேளை window இல் புள்ளிகள் எதுவும் காணப்படாது. அதற்கு விசைப்பலகையில் Esc இஐ அழுத்தி பின் z ஐ அழுத்தி Enter ஐ அழுத்தி பின் E ஐ அழுத்தி Enter இ அழுத்தவும். இப்போது புள்ளிகள் யாவும் window இல் தெரியும்.
நிறைய புள்ளிகளை insert பண்ண இது ஒரு சிறந்த முறை ஆகும் . மீண்டும் அடுத்த பதிவில் ஒரு தகவலோடு சந்திப்போம்.